மாதவனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்!

மாதவனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்!

மாதவனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்!
Published on

நடிகை மஞ்சு வாரியர் மாதவனுக்கு ஜோடியாக முதன்முறையாக பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

 மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் தனது கணவர் திலீப்பை விவாகரத்து செய்தபின்னர் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில் வெளியான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் வசூல் சாதனை செய்தது. அதைத்தான் தமிழில் ஜோதிகா நடிப்பில் ’36 வயதினிலே’ படமாக வெளியானது. தமிழில் முதன்முறையாக தனுஷுடன் ’அசுரன்’ படத்தில் அறிமுகமானார். மூன்று குழந்தைகளின் தாயாக சிவசாமியின் மனைவியாக நடிப்பில் பிரமாதப்படுத்தி பாராட்டுக்களைக் குவித்தார்.

இந்நிலையில், பாலிவுட்டில் அறிமுக இயக்குநர் கல்பேஷ் இயக்க மாதவனுக்கு ஜோடியாக ’ameriki pandit’ படத்தில் நடிக்கவிருக்கிறார். ஒரு ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில் மஞ்சு வாரியர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது போபாலில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளதாகவும் விரைவில் மஞ்சு வாரியர் இணைவார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், நாளை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் மஞ்சு வாரியர் நடித்த ‘தி பிரீஸ்ட்’ படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com