‘சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்துக்கு நன்றி’ - மஞ்சு வாரியர் அட்வெஞ்சர் பைக் பயணம்

‘சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்துக்கு நன்றி’ - மஞ்சு வாரியர் அட்வெஞ்சர் பைக் பயணம்
‘சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்துக்கு நன்றி’ - மஞ்சு வாரியர் அட்வெஞ்சர் பைக் பயணம்

நடிகர் அஜித் உடன் நடிகை மஞ்சுவாரியர் பைக் பயணம் சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கி வரும் ‘ஏ.கே.61’ படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி எனப் பலரும் நடித்து வருகின்றனர். இது அஜித்தின் 61-வது படமாக உருவாகிவருகிறது. சிலநாட்களுக்கு முன் இந்தப் படப்பிடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்ட அஜித் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தார். அந்தப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது. அந்தப் படப்பிடிப்பை நிறைவு செய்தவுடன் நண்பர்களுடன் இணைந்து இமையமலை சுற்றுப்பயணம் கிளம்பி இருக்கிறார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியானது. தற்போது அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.

அதில் "சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் அவர்களுக்கு நன்றி. பயணம் என்றால் அதிக ஆர்வம் கொண்ட நான், நான்கு சக்கர வாகனத்தில் பல கிலோமீட்டர்கள் பயணித்து இருக்கிறேன். முதன் முறையாக டூவீலரில் ஒரு டூர் வந்திருக்கிறேன். இதற்கு காரணமான சக பயணிகளுக்கு நன்றி. இந்த அட்வென்சர் பயணத்தில் என்னை இணைத்துக் கொண்ட அஜித் அவர்களுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.

On behalf of Adventure Riders India and Mr. Sarfaraz Khan, we are glad to welcome @ManjuWarrier4 and #bineeshchandra on our current tour of ladakh. Wish you both many more safe miles and plenty more memories!#adventureridersindia #ajithkumar pic.twitter.com/oaVQiylWAB
— Suprej Venkat (@suprej) September 2, 2022

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com