\
மானேஜரின் பர்சனல் விவகாரம்: காஜல் அகர்வால் விளக்கம்!

மானேஜரின் பர்சனல் விவகாரம்: காஜல் அகர்வால் விளக்கம்!

மானேஜரின் பர்சனல் விவகாரம்: காஜல் அகர்வால் விளக்கம்!
Published on

போதை பொருள் விவகாரத்தில் தனது மானேஜர் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்பட 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், காஜல் அகர்வாலின் தெலுங்கு மானேஜர் ரோணி, அவரது வீட்டில் காஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார். அவர் தெலுங்கு திரையுலக நடசத்திரங்கள் பலருக்கு மானேஜராக பணியாற்றி இருப்பதால் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தால் காஜல் அகர்வாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல், விஜய்யுடன் மெர்சல், அஜித்துடன் விவேகம் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் விளக்கம் கொடுத்துள்ளார். ’போதைப் பொருள் விவகாரத்தில் என் மானேஜர் ரோனி கைது செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடமாட்டேன். ஆதரவும் தெரிவிக்க மாட்டேன். அவர் கைதுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சினிமா தொடர்பான என் வேலைகள் முடிந்ததும் அவரிடம் வேறு தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. அவரின் மற்ற நடவடிக்கைகள் பற்றி எனக்குத் தெரியாது. என் கேரியர் தொடர்பான விஷயங்களை எனது பெற்றோர் கவனித்து வருவதும் சினிமா துறையினருக்குத் தெரியும்’என்று விளக்கமளித்துள்ளார் காஜல்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com