ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்க்ஸ்’ படத்தில் மனிஷா கொய்ராலா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைக்கும் திரைப்படம் ’99 சாங்க்ஸ்’. இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதனை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை எழுதி இயக்குகிறார். ‘ஐடியல் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒய்எம் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிக்கிறார்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதனை அடுத்து படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் ஒவ்வொரு காட்சியும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவில் நடித்திருக்கும் நட்சத்திரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எஹன் பட், எடில்ஸி வர்கீஸ், டென்ஸின் டல்ஹா, லிசா ரே, மனிஷா கொய்ராலா, ரஞ்சித் பாரோட், ராகுல் ராம் ஆகியோர் நடித்துள்ளதாக தெரிகிறது. இது முழுக்க முழுக்க இசை சம்பந்தமான திரைப்படம். இதனை வரும் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.