’என்னதா பாத்தாங்க, ஆனால் என்னதான் பாத்தாங்கனு தெரியலையே’ - மிரட்டும் ’நவரசா’ டிரெய்லர்

’என்னதா பாத்தாங்க, ஆனால் என்னதான் பாத்தாங்கனு தெரியலையே’ - மிரட்டும் ’நவரசா’ டிரெய்லர்

’என்னதா பாத்தாங்க, ஆனால் என்னதான் பாத்தாங்கனு தெரியலையே’ - மிரட்டும் ’நவரசா’ டிரெய்லர்
Published on

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் கெளதம் மேனன், வசந்த், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, ரவீந்திரன் பிரசாத், சர்ஜுன் உள்ளிட்ட ஒன்பது இயக்குநர்கள் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் 9 குறும்படங்களை இயக்கியிருக்கிறார்கள். கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு  இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து இதனை தயாரித்திருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் ‘நவரசா’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது.

ட்ரெய்லரில் சூர்யா, அஞ்சலி, விஜய் சேதுபதி, டெல்லி கணேஷ், அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ் பலர் இடம்பெற்றிருந்தாலும் குறைவான வசனங்களே இடம்பெற்றுள்ளன, மணி ரத்னம் படத்தைப்போல. கடைசியில் “பசங்கல்லாம் சேர்ந்து அவனுக்கு ஒரு பேர் வச்சோம்... ஏ சண்டிமணி’ என்று யோகிபாபுவும் பின்னணியில் ஒலிக்கும் குரலும் வசனக்குறையை சரிசெய்வது மனதை குதூகலிக்க வைக்கிறது.

இருப்பினும், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள விஷூவல்கள் பல இடங்களில் உற்று நோக்க வைக்கிறது. மிகவும் ஆழமான கதைக் களத்தை கொண்டிருப்பதை என்பதை நமக்கு உணர்த்துகிறது. கேமிரா கோணங்களில் நடிகர்களின் முகங்களில் வரும் பாவனைகள் மிரளச் செய்கிறது. நடிப்பில் தங்களது திறமையை நிரூபித்த பெரிய நடிகர் பட்டாளத்தை ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளனர். 

ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சூர்யாவில் ஸ்டைலான லுக்கை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். 

ட்ரெய்லரில் யுத்தம் தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இது இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பானது போல் தோன்றுகிறது. பாபி சிம்ஹா ராணுவ உடையில் இருக்கும் காட்சியில் அவது உடையில் பிரபாகரன் படம் இருப்பது தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com