ஓடிடியில் வெளியானது மணிரத்னம் தயாரிப்பில் உருவான ‘நவரசா’ ஆந்தாலஜி படம்

ஓடிடியில் வெளியானது மணிரத்னம் தயாரிப்பில் உருவான ‘நவரசா’ ஆந்தாலஜி படம்

ஓடிடியில் வெளியானது மணிரத்னம் தயாரிப்பில் உருவான ‘நவரசா’ ஆந்தாலஜி படம்
Published on

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நவரசா’ ஆந்தாலஜி படம் வெளியாகியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று 12.30 மணிக்கு வெளியாகியுள்ளது.

ஒன்பது படங்களின் விபரங்கள்:-

’கிடார் கம்பி மேலே நின்று’ - கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவும் பிரக்யா மார்டினும் நடித்துள்ளார்கள். காதல் கதை என்று சொல்லப்படுகிறது.

‘பாயாசம்’ - வசந்த் இயக்கத்தில் டெல்லி கணேஷ், ரோகிணி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.

’சம்மர் ஆஃப் 92’ - இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

‘எதிரி’ - பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், நடிகை ரேவதி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.

‘பீஸ்’ - கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கெளதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.

’ரெளத்திரம்’ - நடிகர் அரவிந்த்சாமி இயக்கத்தில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.

’ப்ராஜெக்ட் அக்னி’ - கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா நடித்திருக்கிறார்கள்.

’இன்மை’ - ரதிந்தீரன் பிரசாத் இயக்கத்தில் சித்தார்த் பார்வதி நடித்திருக்கிறார்கள்.

’துணிந்தபின்’ - சர்ஜுன் இயக்கத்தில் அதர்வா முரளி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com