Manipuri film Boong wins big at BAFTA
BAFTABoong

`Lilo & Stitch', `Zootopia 2' படங்களுடன் மோதி வென்ற இந்திய படம்! | Boong | BAFTA

Boong கடந்த இரு ஆண்டுகளாக Toronto International Film Festival, MAMI Mumbai Film Festival, International Film Festival of India உள்ளிட்ட பல திரை விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
Published on

லக்ஷ்மிப்பிரியா தேவி இயக்கத்தில் உருவான மணிப்பூரி மொழி படம் `பூங்' (Boong). குகுன், பாலா ஹிஜாம், அன்கோம் எனப் பலரும் நடித்திருந்த இந்தப் படத்தை Chalkboard Entertainment, Suitable Pictures மற்றும் பாலிவுட் நடிகர் Farhan Akhtarன் Excel Entertainment தயாரித்திருந்தது. இது, கடந்த இரு ஆண்டுகளாக Toronto International Film Festival, MAMI Mumbai Film Festival, International Film Festival of India உள்ளிட்ட பல திரை விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்தப் படம் தற்போது மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. BAFTA எனப்படும் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாடமியின் 79ஆவது விருது வழங்கும் விழா நேற்று லண்டலில் நடைபெற்றது. இதில் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படப் பிரிவில் (Children’s and family film) நாமினேட் ஆகி இருந்தது. இதில் உடன் போட்டியிட்ட Arco மற்றும் டிஸ்னி தயாரித்த `Lilo & Stitch' மற்றும் `Zootopia 2' ஆகிய படங்களுடன் மோதி விருதை வென்றுள்ளது.

தன் அம்மாவுக்கு ஆச்சர்ய பரிசு ஒன்றைக் கொடுக்க நினைக்கும் மகன் மேற்கொள்ளும் பயணமும், அதில் வரும் சிக்கல்களும்தான் இப்படத்தின் கதை. BAFTAல் இப்பிரிவில் விருதுபெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது `பூங்'. ஏற்கெனவே 2024இல் நடந்த International South Asian Film Festivalல் Excellence in Feature Filmmaking விருது, 17th Asia Pacific Screen Awardsல் Best Youth Film விருது, 2025இல் நடந்த Indian Film Festival of Melbourneல் Best Actor (Male) - Special Mention விருது ஆகியவற்றை வென்றுள்ளது. இப்போது BAFTA விருதையும் வென்றுள்ளது.

Manipuri film Boong wins big at BAFTA
"Negativity வந்தால் நான் ப்ளாக் செய்துவிடுவேன்!" - Trolls பற்றி சமந்தா | Samantha

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com