சினிமா
மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’... நம்மாழ்வாராக நடிக்கப்போவது யார்?
மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’... நம்மாழ்வாராக நடிக்கப்போவது யார்?
ஆர்ட் பிலிம் டைப் படங்கள் என்றாலே அலறிக் கொண்டு ஓடிய தமிழ் சினிமா ரசிகர்களை தியேட்டருக்குள் அழைத்து வந்த வித்தைக்காரர் ‘காக்கா முட்டை’ மணிகண்டன்.
காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களைத் தொடர்ந்து ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு விவசாயியின் கதை என்பதை தலைப்பே சொல்லிவிடும். யதார்த்தத்திற்கு அருகில் நின்று படம் எடுக்கும் மணிகண்டன், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்கி வருகிறார். ‘இன்றைய அறிவியல் உலகில் விவசாயத்தை பற்றிய தெளிவு நம்மாழ்வாரோடு முடிந்து விட்டது. இதில் நம்மாழ்வார் பாத்திரத்தில் ஜோக்கர் படப்புகழ் சோம சுந்தரத்தை வைத்து படப்பிடிப்பு நடந்திருக்கிறது. ஏனோ அவரை தவிர்த்து விட்டு அவருக்கு பதில் பெரிய நடிகரை நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார் மணிகண்டன்.