ஜன. 6 முதல் ’பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்கில் இணையும் கார்த்தி, ஜெயம் ரவி!

ஜன. 6 முதல் ’பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்கில் இணையும் கார்த்தி, ஜெயம் ரவி!
ஜன. 6 முதல் ’பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்கில் இணையும் கார்த்தி, ஜெயம் ரவி!

மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் வரும் புதன்கிழமை முதல் மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இதில், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவியின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

மணிரத்னத்தின் கனவுப்படமான கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை பல வருடங்களாக படமாக்க முயற்சி செய்து தற்போதுதான் இயக்கி வருகிறார். மணி ரத்னமும் லைகா நிறுவனமும் பெரும் பொருட்செலவில் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள். இவர்களோடு, ஐஸ்வர்யா ராய், அஸ்வின், த்ரிஷா, பிரபு, சரத்குமார், ராய் லட்சுமி, பேபி சாரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகமாக தயாராகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், நடிகர் கார்த்தியும் ஜெயம் ரவியும் நடிக்கும் காட்சிகள் வரும் புதன்கிழமை முதல் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com