ரொம்ப எதிர்பார்புடன் இருக்கிறேன்: அடங்காதே மந்த்ரா பேடி பேட்டி

ரொம்ப எதிர்பார்புடன் இருக்கிறேன்: அடங்காதே மந்த்ரா பேடி பேட்டி

ரொம்ப எதிர்பார்புடன் இருக்கிறேன்: அடங்காதே மந்த்ரா பேடி பேட்டி
Published on

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கும் படம் அடங்காதே. இந்தப் படத்தில் மந்த்ரா பேடி ஆக்‌ஷன் குயினாக களம் இறங்கி இருக்கிறார். மன்மதன் படத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்ததை குறித்து புதிய தலைமுறை இணைய தளத்திற்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

“ரொம்ப எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். ‘மன்மதன்’ படத்தில் நடித்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் என்னை ஞாபகம் வைத்திருந்து திரும்ப நடிக்க கூப்பிட்டார்கள். என்ன பொறுத்தவரை இது ஒரு பாசிடிவ் அப்ரோச். நல்ல படங்களை பண்ண வேண்டும். நல்ல கதைகளில் நான் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படியான ஒரு நல்ல கதை டைரக்டர் சண்முகம் முத்துசாமி மூலமாக எனக்கு கிடைத்திருக்கிறது. அவர் டுவிட்டர், இண்ட்ராகிராமில் என்னோடு நட்பில் இருக்கிறார். அவர் அறிமுகமான காலகட்டத்தில்தான் நான் என்னுடைய முடியை புதிய ஸ்டைலுக்கு மாற்றியிருந்தேன். உடம்பை இளைக்கச் செய்து பர்ஃபெக்ட்டாக இருந்தேன். அந்தப் படங்களை பார்த்துவிட்டு சண்முகம் என்னை தொடர்பு கொண்டார். அவருடைய கதைகக்கான கேரக்டருக்கு நான் பொருந்தி வருகிறேன் என்று சொன்னார்.  
ரோல் என்ன? கதை என்ன? என கேட்டேன். உண்மையில் கதை எனக்குப் பிடிச்சிருந்தது. அதற்குள் சமூகத்திற்கான ஒரு செய்தி இருந்தது. ஒரு இளம் இயக்குநர் எடுத்த எடுப்பிலேயே இப்படியான ஒரு கதையை சொல்ல வருவது ஆச்சர்யம். அவர் கதை கட்டாயம் இந்த சமூகத்திற்கு  அப்பட்டமான ஒரு உணமையை சொல்ல போகிறது. அதில் நானும் இருக்கிறேன். அதை நினைத்து பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்று மந்த்ரா பேடி கூறினார்.


 


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com