’அழகாக நேசித்த உறவை...’: காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்!

’அழகாக நேசித்த உறவை...’: காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்!

’அழகாக நேசித்த உறவை...’: காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்!
Published on

பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகனும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் மஞ்சு, தனது காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர், மோகன்பாபு. நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான இவருக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகிய மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். மூவருமே தெலுங்கு சினிமாவில் நடித்து வருகின்றனர். இதில், மனோஜ் மஞ்சு தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலி பிரணிதியை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. இதுபற்றி மனோஜ் எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இப்போது விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 

’கனத்த இதயத்துடன் இதைத் தெரிவிக்கிறேன். கருத்துவேறுபாடு காரணமாக, 2 வருடமாக நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். சில சுயபரிசோதனைக்குப் பிறகு மிகுந்த வலியுடன் கடந்த 2 வருடத்துக்கு முன் விவாகரத்து பெற்றுவிட்டோம். நன்றாக நேசித்த அழகான உறவை அதிகாரப்பூர்வமாக முறித்துக்கொண்டோம்’ என்று சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com