டிவி நடிகைக்கு பாலியல் தொல்லை: அரசியல் பிரமுகர் கைது!
டிவி நடிகைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
மும்பையை சேர்ந்தவர் பிரபல இந்தி சீரியல் தொடர் நடிகை. இவர் அந்தேரியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சிக்குச் செல்வது வழக்கம். இதே ஜிம்முக்கு விஸ்வநாத் ஷெட்டி என்பவரும், நடிகை வரும் நேரத்தில் வருவார். ஷெட்டி அரசியல் கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர்.
இந்நிலையில் நடிகையை தெரிந்துகொண்ட ஷெட்டி, அவரை தனது ஆசைக்கு இணங்கும்படி அவரிடம் கேட்டாராம்.இதனால் கடுப்பான நடிகை, அவரை கடுமையாகத்திட்டியுள்ளார். கடந்த மாதம் 13-ம் தேதி ஜிம்மில் வைத்து இருவருக்கும் வாக்கு வாத ம் அதிகரித்தது. இதையடுத்து எல்லோர் முன்பும் பாலியல் ரீதியாக நடிகையை அவர் தொந்தரவு செய்தார். அங்கிருந்தவர்கள் இதை வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதுபற்றி போலீசில் புகார் செய்தார் நடிகை. சிசிடிவி கேமரா காட்சிகள் ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ஷெட்டி தனது சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்ய முடியாமல் இருந்த னர். அங்கிருந்தே முன் ஜாமின் பெறவும் முயற்சி செய்தார். ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு அவர் மும்பை வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கைதுசெய்தனர்.
ஷெட்டி மீது இன்னும் சில துணை நடிகைகள், பாலியல் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.