நடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது!

நடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது!

நடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது!
Published on

மேற்குவங்க நடிகைக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தொல்லைக் கொடுத்தும் மிரட்டியும் வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பிரபல வங்காள நடிகை அருணிமா கோஷ். பல படங்களில் நடித்துள்ள இவர், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரது சமூக வலைத்தள பக்கத்தில், ஒருவர் மே 30 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து, ஆபாசமாகவும் சர்ச்சைக்குரிய விஷயங் களையும் பதிவிட்டு வந்துள்ளார். பின்னர் மிரட்டியும் உள்ளார். இதையடுத்து போலீசில் புகார் செய்தார் அருணிமா. நடவடிக் கையில் இறங்கிய போலீசார், தெற்கு கொல்கத்தாவில் உள்ள கர்பா பகுதியை சேர்ந்த முகேஷ் ஷா என்ற இளைஞரை கைது செய்தனர்.  இவர், முகேஷ் மயுக் என்ற ஃபேக் ஐடியில் இருந்து நடிகைக்குச் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார்.

இதுபற்றி நடிகை அருணிமா கோஷ் கூறும்போது, ‘’ஆரம்பத்தில் இதுபோன்ற கமென்ட்டுகளை கண்டுகொள்ளாமல்தான் இருந்தேன். ஆனால், எனது ஒவ்வொரு அசைவையும் கவனித்து, என்ன செய்கிறேன் என்பதையும் எங்கு செல்கிறேன் என்ப தையும் கண்காணித்து எழுதிக் கொண்டிருந்தான். மிரட்டவும் செய்ததால் போலீசில் புகார் செய்தேன்’’ என்றார்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘’அவர், ஏன் இப்படி செய்தார் என்பது பற்றி விசாரித்து வருகிறோம். அதோடு அவர் மனரீதி யாக சரியாகத்தான் இருக்கிறாரா? என்பதையும் கவனித்து வருகிறோம்’’ என்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com