\
‘தர்பார்’  ரிலீஸின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதிகோரி விண்ணப்பம்

‘தர்பார்’ ரிலீஸின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதிகோரி விண்ணப்பம்

‘தர்பார்’ ரிலீஸின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதிகோரி விண்ணப்பம்
Published on

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. ரஜினியின் 167-வது படமான தர்பாரில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் வரும் 9-ம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது.

user

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள தர்பாருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது தர்பார் பட புரமோஷனில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தர்பார் வெளியாகும் தினத்தன்று சேலத்தில் உள்ள ARRS என்ற திரையரங்கு முன்பு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அதற்கான அனுமதிகோரி கனகராஜ் என்பவர் கோட்டாட்சியரிடம் அனுமதி கோரியுள்ளார். அவரது கோரிக்கையை பெற்ற கோட்டாட்சியர், திரையரங்கம் உள்ள இடத்தை மேற்பார்வை செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com