நடிகர் மம்முட்டிமுகநூல்
சினிமா
நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோயா?
சமீப நாள்களாக மம்முட்டி எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றும், அவருக்கு புற்றுநோய் இருப்பதால் ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின.
மலையாள நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீப நாள்களாக மம்முட்டி எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றும், அவருக்கு புற்றுநோய் இருப்பதால் ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின.
இதற்கு மம்முட்டி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இது வெறும் வதந்தி எனவும், நடிகர் பூரண நலமுடன் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருவதால் அவர் ஷுட்டிங் செல்லாமல் பிரேக் எடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என மம்முட்டி குழுவினர் தெரிவித்துள்ளனர்.