Mammootty join hands with Asif Ali and Naslen
MammoottyMattancherry Mafia

மம்மூட்டி உடன் நஸ்லென், ஆசிஃப் அலி.. இணையும் அசத்தல் கூட்டணி! | Mattancherry Mafia | Mammootty

புதுமையான பல படங்களில் இளம் இயக்குநர்களுடன் பணியாற்றி வருகிறார் மம்மூட்டி. இப்போது இவரின் அடுத்த பட அறிவிப்பால் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.
Published on

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் மம்மூட்டி. இவர் தொடர்ச்சியாக Bheeshma Parvam, Puzhu, Rorschach, Nanpakal Nerathu Mayakkam, Kannur Squad, Kaathal – The Core, Bramayugam, Kalamkaval என புதுமையான பல படங்களில் இளம் இயக்குநர்களுடன் பணியாற்றி வருகிறார். இப்போது இவரின் அடுத்த பட அறிவிப்பால் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.

மம்மூட்டி நடிப்பில் 'உண்டா' படம் இயக்கியவர் காலித் ரஹ்மான். இவர் இயக்கிய Anuraga Karikkin Vellam, Unda, Love, Thallumaala, Alappuzha Gymkhana என அனைத்துp படங்களும் பெரிய அளவில் ஹிட்டானவை. காலித் ரஹ்மான் - மம்மூட்டி கூட்டணியில் படம் சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இப்போது இந்தப் படத்தில் மம்மூட்டியுடன், ஆசிஃப் அலி, நஸ்லென் ஆகியோர் நடிக்கின்றனர் என்றும் படத்தின் பெயர் `Mattancherry Mafia' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதையை நியோக் கிருஷ்ணா, ஷர்ஃபு-சுஹாஸ் மற்றும் தஸ்ரீக் அப்துல் சலாம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவும், நௌஃபல் அப்துல்லா படத்தொகுப்பும், விஷ்ணு கோவிந்த் ஒலி வடிவமைப்பும் என வலுவான கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு ரெக்ஸ் விஜயன் இசையும், சுஷின் ஷ்யாம் பின்னணி இசையும் அமைக்கின்றனர்.

Mammootty join hands with Asif Ali and Naslen
ஹெச்.வினோத் இல்லை.. மெகாஹிட் பட இயக்குநருடன் இணைகிறாரா தனுஷ்? | Dhanush

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com