ராட்டர்டேம் பட விழாவில் ராமின் ’பேரன்பு’

ராட்டர்டேம் பட விழாவில் ராமின் ’பேரன்பு’
ராட்டர்டேம் பட விழாவில் ராமின் ’பேரன்பு’

ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள ’பேரன்பு’ படம், ராட்டர்டேம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, திருநங்கை அஞ்சலி அமீர், சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பேரன்பு’. ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார் ஓட்டுனராக மம்மூட்டி நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன், திரைப்பட விழாக்களில் இதை திரையிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, 47-வது சர்வதேச ராட்டர்டேம் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.

நெதர்லாந்தின் தெற்கு ஹாலந்தில் உள்ள ராட்டர்டேம் நகரத்தில் நடக்கும் பட விழாவை அடுத்து, மேலும் பல விழாக்களில் 'பேரன்பு' திரையிடப்பட இருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com