நடிகர் விஜய் - மமிதா பைஜு
நடிகர் விஜய் - மமிதா பைஜுweb

”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்..” கடைசி படம் குறித்து விஜய் சொன்னது? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!

’ஜன நாயகன்’ தான் கடைசி திரைப்படமா என்ற கேள்விக்கு விஜய் சொன்ன பதில் என்று நடிகை மமிதா பைஜு சொன்ன தகவல் வைரலாகி வருகிறது.
Published on

சினிமாவிலிருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய சினிமா கரியரின் கடைசி திரைப்படமாக ’ஜனநாயகன்’ படத்தில் நடித்துவருகிறார்.

ஜன நாயகன்
ஜன நாயகன்புதிய தலைமுறை

எச் வினோத் இயக்கம் நடிகர் விஜயின் 69வது படத்தில் அனிமல் பட வில்லனான பாபி தியோல், பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே மற்றும் பிரேமலு புகழ் பட நடிகை மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

இத்திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் கிளிம்ஸ் வீடியோ விஜயின் பிறந்தநாளான நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஜன நாயகன் தான் கடைசி படமா?

நடிகர் விஜயின் 69வது திரைப்படமாக உருவாகியிருக்கும் ஜன நாயகன் படத்திற்கு பிறகு, விஜய் திரைப்படங்களில் நடிக்காமல் முழுநேர அரசியல் பணிகளில் இறங்கப்போவதாக சொல்லப்படுகிறது. அதனாலேயே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.

இந்த சூழலில் ஜன நாயகன் தான் கடைசி படமா என்ற கேள்விக்கு விஜய் சொன்ன பதிலாக நடிகை மமிதா பைஜு வெளியிட்டிருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மமிதா பைஜு, ஜன நாயகன் தான் உங்களுக்கு கடைசி படமா என்று விஜயிடன் கேட்டபோது, ”திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது குறித்து, தேர்தல் முடிவுகளை பொறுத்தே முடிவு செய்வேன்” என்று விஜய் கூறினார் என்று பேசியுள்ளார். அவர் பேசிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com