\
கூண்டுக்குள் அடைந்திருந்தபடி மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு

கூண்டுக்குள் அடைந்திருந்தபடி மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு

கூண்டுக்குள் அடைந்திருந்தபடி மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு
Published on

கேன்ஸ் திரைப்பட விழாவில் மல்லிகா ஷெராவத் கூண்டுக்குள் அடைந்திருந்தபடி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

பெண்குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வில் நடிகை மல்லிகா ஷெராவத் பங்கேற்றார். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடைபெற்று வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ளும் விழாவில், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், குழந்தைகளை சுதந்திரமாய் இருக்க விடுங்கள் எனும் வாசகங்கள் இடம்பெற்றிருந்த 12 அடி 8 அங்குல இரும்புக் கூண்டுக்குள் இருந்தபடி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com