\
பகத் பாசில் நடிக்கும் ‘மாலிக்’ திரைப்படம்: மே மாதம் 13-ல் வெளியாகிறது

பகத் பாசில் நடிக்கும் ‘மாலிக்’ திரைப்படம்: மே மாதம் 13-ல் வெளியாகிறது

பகத் பாசில் நடிக்கும் ‘மாலிக்’ திரைப்படம்: மே மாதம் 13-ல் வெளியாகிறது
Published on

பகத் பாசில் நடிக்கும் மாலிக் படம் அடுத்த வருடம் மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “சூப்பர் டீலக்ஸ்”, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் பகத் பாசில். மலையாள படங்களின் அதிக கவனம் ஈர்த்த பகத் பாசிலுக்கு தமிழிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாலிக்’படம் தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலான நிலையில், இந்தப் படம் அடுத்த வருடம் மே மாதம் 13 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ்வரன் நாரயணன் இயக்கி இருக்கிறார். படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரேமம் பட இயக்குநர் இயக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ’பாட்டு’ படத்தில் பகத் பாசில், நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com