\
ரஜினியுடன் மலேசிய பிரதமர் செல்ஃபி

ரஜினியுடன் மலேசிய பிரதமர் செல்ஃபி

ரஜினியுடன் மலேசிய பிரதமர் செல்ஃபி
Published on: 

நடிகர் ரஜினிகாந்துடன் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நேற்று சில விழாக்களில் கலந்துகொண்ட அவர், இன்று காலை ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவர் இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் மனைவி ரோஸ்மாவும் உடனிருந்தார். ரஜினிகாந்த், அவர் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் அவர்களை வரவேற்று உபசரித்தனர். பின்னர் ரஜினிகாந்துடன் பேசிக்கொண்டிருந்த மலேசிய பிரதமர், திடீரென தனது செல்போனில் செல்பி எடுத்தார். இதை எதிர்பார்க்காத ரஜினி, அவருடன் ஜாலியாக போஸ் கொடுத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com