மலேசியா நட்சத்திர கலைவிழா ஆல்பம்

மலேசியா நட்சத்திர கலைவிழா ஆல்பம்
மலேசியா நட்சத்திர கலைவிழா ஆல்பம்

மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர கலை விழாவிற்காக முன்னோட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஜனவரி 6ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பிரம்மாண்டமான நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கமல், ரஜினி உள்பட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர். அங்கு விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் டிரைலரும், அவர் நடித்த இன்னொரு படமான 'சண்டக்கோழி 2 படத்தின் டீசரும் வெளியிடப்பட உள்ளது. மேலும் விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்துசொல்றேன்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்கு முன் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விழாவிற்காக சென்றுள்ள ரஜினிக்கு அங்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. அதனையொட்டி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை ரஜினி சந்தித்து பேசியுள்ளார். மேலும் கோலாகலமாக கலைக்கட்டி உள்ள நட்சத்திர பட்டாளங்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தப் படங்கள் திரை ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்புகைப்படங்களை கலர்ஃபுல் ஆல்பமாக தொகுத்தளித்துள்ளோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com