’ஜிமிக்கி கம்மல்’ புகழ் பாடலாசிரியர் அணில் பனசூரன் கொரோனாவால் உயிரிழப்பு!

’ஜிமிக்கி கம்மல்’ புகழ் பாடலாசிரியர் அணில் பனசூரன் கொரோனாவால் உயிரிழப்பு!
’ஜிமிக்கி கம்மல்’ புகழ் பாடலாசிரியர் அணில் பனசூரன் கொரோனாவால் உயிரிழப்பு!

மலையாளத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான அணில் பனசூரன் கொரோனாவால் உயிரிழந்தது திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்ற ’ஜிமிக்கி கம்மல்’ பாடல் உலகம் முழுக்க சூப்பர் ஹிட் அடித்தது. இந்தியாவில் மலையாள மொழி தெரியாதவர்கள் கூட இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கினார்கள்.

இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டினரும் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடி தெறிக்கவிட்டார்கள். உலகம் முழுக்க வைரல் ஹிட் அடித்த ’ஜிமிக்கி கம்மல்’ பாடலை எழுதியவர்தான் 55 வயதாகும் பிரபல பாடலாசிரியர் அணில் பனசூரன். கடந்த 2007  ஆம் ஆண்டு வெளியான ‘மகள்க்கு’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் அடுத்தடுத்து பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி புகழ்பெற்றார். 2008 ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அணில் பனசூரன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்தார். நேற்றிரவு திடீரென சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால், மலையாள திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com