ஜப்பான் தியேட்டர்களில் வெளியாகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

ஜப்பான் தியேட்டர்களில் வெளியாகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

ஜப்பான் தியேட்டர்களில் வெளியாகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’
Published on

ஓடிடியில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் ஜப்பானில் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது என்று, இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.  

சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தென்னிந்திய ரசிகர்களிடமும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜியோ பேபி இயக்கிய, இப்படம் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது அமேசான் பிரைமிலும் கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை பார்த்துவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியது குறிப்பிடத்தக்கது. சீனாவில் நடக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடவும் தேர்வாகி இருக்கிறது. 

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் ஜோமன் ஜேக்கப் ஏசியா நெட் மலையாள ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில் “ ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் ஜப்பானில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் விநியோக உரிமை ஜப்பான் தியேட்டர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா சூழலில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் வெளியீடு தாமதமாகியுள்ளது. நீஸ்ட்ரீமில் வெளியானபோதே படம் குறித்து சர்வதேச அளவில் அழைப்புகள் வந்தன. அதேபோலத்தான், ஜப்பானில் இருந்து சில திரைப்பட முகவர்கள் எங்களை அணுகினர். ஜப்பானிய வசனங்களுடன் படம் ஜப்பானில் வெளிவரவிருக்கிறது. ஆனால், வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை. கொரோனாவால் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. தியேட்டர்கள் திறக்கும்போது முடிவு எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com