குட்பேட்அக்லி வில்லன்
குட்பேட்அக்லி வில்லன்முகநூல்

படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்பாடு.. தப்பித்து ஓடிய குட்பேட்அக்லி வில்லன்!

போதைப்பொருள் விவகாரத்தால் நடிகர் தப்பியோடிய காட்சிகளும் வெளியாகி மலையாள இன்டஸ்ட்ரியை பரபரப்பாக்கியிருக்கின்றன
Published on

செய்தியாளர்: சுமன்

திரைப்பட படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்திய குட்பேட்அக்லி வில்லன் நடிகர் பெயரை வெளியிட்டுள்ள மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

குட்பேட்அக்லி வில்லன்
குட்பேட்அக்லி வில்லன்

போதைப்பொருள் விவகாரத்தால் நடிகர் தப்பியோடிய காட்சிகளும் வெளியாகி மலையாள இன்டஸ்ட்ரியை பரபரப்பாக்கியிருக்கின்றன. எர்ணாகுளத்தில் மலையாள திரைப்பட படப்பிடிப்பு ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பின்போது போதைப்பொருள் பயன்படுத்திய குட்பேட்அக்லி வில்லன் நடிகர் Shine Tom Chacko, தவறான வார்த்தைகளை பேசியதாகவும், தன்னிடமும், சக நடிகைகள், பெண்களிடமும் தவறான முறையில் நடக்க முற்படட்டதாகவும் நடிகை வின்சி அலோஷியஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகரின் இந்த செயலால் தங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக நடிகை தெரிவித்துள்ளார். நடிகர் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தி தவறாக நடந்துகொண்டது தொடர்பாக இயக்குநரிடம் தாம் புகார் கூறியதையடுத்து நடிகர் சாக்கோவை இயக்குநர் எச்சரித்ததாக வின்சி குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கேரள திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மாவிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ள வின்சி, ஆனால் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை என்றார்.

இந்த புகார் காரணமாக படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகை வெளிப்படுத்திய போதைப்பொருள் புழக்கம் காரணமாக நடிகர் சாக்கோ தங்கியிருந்த ஹோட்டலில் காவல்துறையினர் சோதனை செய்ய வந்தனர். இதனை அறிந்துகொண்ட சாக்கோ, அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. சாக்கோ ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். நடிகை அளித்த புகாரின்பேரில் சாக்கோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மா அமைப்பின் பொதுச்செயலாளர் Saji Nanthyatt தெரிவித்துள்ளார்.

 குட்பேட்அக்லி வில்லன்
’புலே’ பட ரிலீஸ் விவகாரம் | “நாட்டில் சாதிகளே இல்லையென்றால்..” காட்டமாய் விமர்சித்த அனுராக் காஷ்யப்!

சாக்கோ குறித்த புகாரை அடுத்து அவர் தரப்பு விளக்கம் கேட்கப்படும் என்று அம்மா அமைப்பு தெரிவித்துள்ளது. மலையாள திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து ஏற்கனவே புகார்கள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில், போதைப்பொருளுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் வின்சிஅலோசியஸ், தற்போது நடிகர் சாக்கோ, படப்பிடிப்பின்போது போதைப்பொருளை பயன்படுத்தியதோடு ஆபாசமாக நடந்து கொண்டதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். நடிகையின் இந்த புகார் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com