\
ஐசியுவில் சிகிச்சை.. அபாயக்கட்டத்தை தாண்டிய டோவினோ

ஐசியுவில் சிகிச்சை.. அபாயக்கட்டத்தை தாண்டிய டோவினோ

ஐசியுவில் சிகிச்சை.. அபாயக்கட்டத்தை தாண்டிய டோவினோ
Published on

மோலிவுட்டின் பிரபல நடிகர் டோவினோ தாமஸ், தற்போது ரோஹித் இயக்கத்தில் ’கலா’ என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். எடக்காடு பகுதியில் படப்பிடிப்பு நடந்துவரும் சூழ்நிலையில், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சந்திரா தாமஸ், தீயில் நடக்கக்கூடிய ஒரு அபாயகரமான சண்டைக்காட்சியின் வீடியோ க்ளிப் ஒன்றை வெளியிட்டுள்ளார். டூப் போடாமல் நடித்திருக்கும் டோவினோவை பலரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில், ஒரு சண்டைக் காட்சியில் நடித்துக்கொண்டிருந்த டோவினோவிற்கு வயிற்றில் பலத்த அடிப்பட்டு கொச்சினில் உள்ள ரெனாய் மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிடி ஆஞ்சியோகிராம் எடுத்திருப்பதாகவும், ரத்தக்கட்டு உருவாகி இருப்பதால் 48 மணிநேரம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது 24 மணிநேரம் கடந்த நிலையில், உள் ரத்தக்கசிவு எதுவும் இல்லை எனவும், அபாயகரமான கட்டத்தைக் கடந்துவிட்டார் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மீண்டும் 48 மணிநேர மருத்துவ கண்காணிப்பில் வைத்து, சிடி ஆஞ்சியோகிராம் எடுத்தபிறகுதான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com