\
சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் இணையும் மலர் டீச்சர்

சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் இணையும் மலர் டீச்சர்

சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் இணையும் மலர் டீச்சர்
Published on

செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் நாயகியாக பிரேமம் பட நாயகி சாய்பல்லவி அறிவிக்கப்பட்டுள்ளார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்பட்டு, தீபாவளிக்கு படம் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்த தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, படத்தின் இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விஷயங்களையும் விரைவில் அறிவிப்போம் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் நாயகியை ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர் நிறுவனம் அறிவித்துள்ளது. சாய் பல்லவி நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com