மலையாள ’பிக்பாஸ் சீசன் 3’ ; சென்னையில் ஷூட்டிங்!

மலையாள ’பிக்பாஸ் சீசன் 3’ ; சென்னையில் ஷூட்டிங்!
மலையாள ’பிக்பாஸ் சீசன் 3’ ; சென்னையில் ஷூட்டிங்!

விரைவில் தொடங்கவிருக்கும் மலையாள ’பிக்பாஸ் சீசன் 3’ தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை ஈவிஎம் ஃபிலிம் சிட்டியில் படமாக்கவுள்ளது.

இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் ஹிட் அடித்த நிகழ்ச்சி பிக்பாஸ். மலையாளத்தில் கடந்த ஆண்டு சீசன் 2 நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே கொரோனா தொற்று கேரளாவில் இந்தியாவிலேயே முதன்முறையாக பரவியதால் 75 ஆம் நாளிலேயே பத்து போட்டியாளர்கள் இருக்கும்போது நிறுத்தப்பட்டது. இதனால், பிக்பாஸ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார். ஆனால், தமிழில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதிமுதல் பிக்பாஸ் சீசன் 4 தொடர்ச்சியாக 100 நாட்கள் ஒளிபரப்பப்பட்டு சமீபத்தில்தான் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இப்போதுவரை கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளது என்பதை ப்ரோமோ வீடியோவுடன் அறிவித்திருக்கிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதிமுதல் தொடங்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கான, படப்பிடிப்பை தமிழ் பிக்பாஸ் நடந்த சென்னை ஈவிஎம் ஃபிலிம் சிட்டியிலேயே நடைபெறவுள்ளது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com