\
’ஸ்பைடர்’ நஷ்டம்: தயாரிப்பாளருக்கு உதவுகிறார் மகேஷ்பாபு!

’ஸ்பைடர்’ நஷ்டம்: தயாரிப்பாளருக்கு உதவுகிறார் மகேஷ்பாபு!

’ஸ்பைடர்’ நஷ்டம்: தயாரிப்பாளருக்கு உதவுகிறார் மகேஷ்பாபு!
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உட்பட பலர் நடித்த படம் ’ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். தாகூர் மது, என்.வி.பிரசாத் தயாரித்திருந்தனர். ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்தப் படத்துக்காக ரூ. 23 கோடி சம்பளம் வாங்கியிருந்தார் மகேஷ்பாபு. தெலுங்கில் ஒரு ஹீரோ வாங்கிய அதிகப்பட்ச சம்பளம் இது. 

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் நஷ்டம் அடைந்ததால், வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பிக்கொடுக்க சம்மதித்துள்ளார் மகேஷ்பாபு. அடுத்த பட ரிலீசுக்குள் இந்தத் தொகையை திருப்பிக் கொடுப்பார் என்று தெலுங்கு பட உலகில் கூறப்படுகிறது.

இதே போல ஏற்கனவே நஷ்டமான படத் தயாரிப்பாளருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறார் மகேஷ்பாபு. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com