அஜித்துடன் மோதுகிறாரா மகேஷ் பாபு?

அஜித்துடன் மோதுகிறாரா மகேஷ் பாபு?
Published on

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விவேகம்’ படமும் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படமும் ஓரே நாளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

நடிகர் அஜிதின் 57வது திரைப்படமான விவேகம் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ஜூன் 22ம் தேதி வெளியிட படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தை ஜூன் 23ம் தேதி வெளியிட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழில், மகேஷ் பாபு முதல் முதலாக நடிக்கும் படத்தை அஜித்தின் 57வது படத்துடன் வெளியிடுவது அந்தப் படத்தின் வசூலை பாதிக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அஜீத்தின் விவேகம் பட ரிலீஸ் ஆகஸ்ட்டுக்கு தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com