மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷின் ‘சர்காரு வாரி பாட்டா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மகேஷ் பாபுவே தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், ” ’சர்காரு வாரி பாட்டா’ வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்படும்” என்று அறிவித்திருக்கிறார் மகேஷ் பாபு. தற்போது, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் செகெண்ட் லுக் போஸ்டர் அல்லது டீசர் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.