\
suriya - mahesh babu
suriya - mahesh babuscene movie trailer / N Chandrababu Naidu@x

சூர்யாவின் SCENE கட்டாயம் பார்க்க வேண்டிய படம்! - மகேஷ் பாபு பாராட்டு

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் சீன் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
Published on: 
Summary

மகேஷ் பாபு 'சீன்' படத்தை பாராட்டி, சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோரின் நடிப்பை புகழ்ந்துள்ளார். காமெடி மற்றும் கிரைம் கலந்த கதைக்களம், நேர்த்தியான இயக்கம் ஆகியவை இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக மாற்றியுள்ளன.

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம் சீன் (SCENE).  சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படம் ரோமஞ்சம், ஆவேசம் படங்களை இயக்கிய சித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுசின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளனர்.

actor suriya Scene movie Review
Scene movieScene movie poster

தீபாவளியையொட்டி காமெடி கிரைம் திரில்லராக வெளிவந்த சீன் திரைப்படம் விமர்சன ரீதியாக நேர்மறையான விமர்சனத்தை பெற்றதோடு உலகளவில் 3 நாட்களில் 145 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து அசத்தியுள்ளது. போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்திருப்பதும், க்ரைம் கதையை காமெடி களமாக சொல்லப்பட்டதும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்தசூழலில் நடிகர் சூர்யாவின் சீன் படத்தை பாராட்டி பேசியிருக்கும் மகேஷ் பாபு, “Scene படத்தை பார்த்து ரசித்தேன். அருமையாக, புத்திசாலித்தனம் மற்றும் மிகுந்த பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தது. சூர்யா இன்பராஜாவாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோரின் நடிப்பு அபாரம். ஜித்து மாதவனின் அற்புதமான எழுத்து மற்றும் நேர்த்தியான இயக்கம் என அனைத்து அம்சங்களிலும் ஈர்க்கக்கூடிய படைப்பு. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்” என பதிவிட்டுள்ளார்.

suriya - mahesh babu
'வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்..' - சூர்யா ஓபன் டாக்
suriya - mahesh babu
ரஜினி, விஜய் யாருமே செய்யாத சம்பவம்.. ’200 கோடி வசூலில் ஹாட்ரிக்..’ சூர்யா செய்யப்போகும் சாதனை!