இந்தியாவின் புகழ்பெற்ற காவியமான மகாபாரதம் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். திரைப்படமாக எடுக்கப்படும் மகாபாரத கதையை விளம்பரப்படங்களின் மூலம் புகழ் பெற்ற ஸ்ரீகுமார் மேனன் இயக்க உள்ளார். மோகன்லால் நாயகனாக நடிக்க உள்ள இப்படத்தை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் எடுக்கத் திட்டமிட்டு உள்ளனர்.
இரு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் 2018ம் ஆண்டு செப்டம்பரிலும் 2வது பாகம் 2020ம் ஆண்டும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் வெளியானால் இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டிஉல் எடுக்கப்பட்ட படமாக கருதப்படும்.