\
பொங்கலுக்கு வருகிறது விஜயகாந்த் மகனின் ‘மதுரவீரன்’

பொங்கலுக்கு வருகிறது விஜயகாந்த் மகனின் ‘மதுரவீரன்’

பொங்கலுக்கு வருகிறது விஜயகாந்த் மகனின் ‘மதுரவீரன்’
Published on

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள மதுரவீரன் திரைப்படம் பொங்கள் பண்டிகைக்கு வெளியாகிறது. 

பி.ஜி.முத்தையா இயக்கியுள்ள ‘மதுரவீரன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள “ என்ன நடக்குது நாட்டுல “ என்ற  பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அந்தப் பாடல் தற்சமயம் ஆர்.கே.நகரில் பிரச்சார பாடலாக தேமுதிக தொண்டர்களால் பரப்பப்பட்டு வருகிறது.  

இந்தப் பற்றி இயக்குநர் முத்தையா, “படத்தில் எனக்கு பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் யுகபாரதியிடம் கூறினேன். அவர் ’ என்ன நடக்குது நாட்டுல’  பாடல் வரிகளை எழுதி தந்தார். அது நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. பாடல் வரிகளின் முக்கியத்துவம் மற்றும் நிஜமான மேடை பாடலை போல் இப்பாடல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து சந்தோஷ் தயாநிதி இரண்டே இசைக் கருவிகளை கொண்டு இப்பாடலை உருவாக்கி தந்தார்”என்றார். 

இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரும் சண்முகபாண்டியனின் தந்தையுமான விஜயகாந்த், “ மதுரவீரன் திரைப்படம் 2018 பொங்கல் பண்டிகையன்று வெளிவருகிறது” என்று ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com