மதுரை: நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிழச்சியில் 10 பவுன் நகை திருட்டு

மதுரை: நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிழச்சியில் 10 பவுன் நகை திருட்டு

மதுரை: நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிழச்சியில் 10 பவுன் நகை திருட்டு
Published on

மதுரையில் நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் கடந்த 9-ம் தேதி நடிகர் சூரியின் அண்ணன் மகளின் திருமண விழா நடந்தது.

இதற்காக நடிகர் சூரி, நடிகர் விமல், நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்யா, ரோபோ சங்கர் உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். அப்போது திருமண விழாவை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மணமகள் அறைக்குள் புகுந்து அங்கிருந்த 5 பவுன் தங்க செயின், 3 பவுன் தங்க மாலை, 2 பவுன் கைச்செயின் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து நடிகர் சூரியின் மேலாளர் சூரியபிரகாஷ் என்பவர் கீரைத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com