’இவர் அவர் தான் நம்புங்க!’ - மதுரையில் ரஜினிக்கு கோவில் கட்டி சிலையை வழிபட்டு வரும் ரசிகர்!

ரஜினியின் திரைப்படங்கள் அனைத்திலும் உள்ள காட்சிகளை அறையினுள் ஒட்டி வைத்தும், நாள் தோறும் ரஜினிக்கு தீபாராதனை, அபிஷேகம் செய்து வருகின்றனர்.
ரஜினி கோவில்
ரஜினி கோவில்PT

மதுரை திருமங்கலத்தில் வசித்து வரும் கார்த்திக் என்ற இளைஞர் திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். தனது வீட்டின் ஒரு அறையை ரஜினிக்கு கோவிலாக வடிவமைக்கப்பட்டு, ரஜினியின் திரைப்படங்கள் அனைத்திலும் உள்ள காட்சிகளை அறையினுள் ஒட்டி வைத்தும், நாள் தோறும் ரஜினிக்கு தீபாராதனை, அபிஷேகம் செய்து வருகின்றார் கார்த்திக்.

இந்த நிலையில் மூன்றடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினிக்கு சிலை தயாரித்து, இன்று அந்தசிலைக்கு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவது போன்று ரஜினி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, பூஜை முடிந்த பின்னர் அச்சிலையை எடுத்து கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து, ரசிகரான கார்த்திக் பால், பன்னீர், இளநீர், சந்தனம் , மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார்.

இந்தியாவிலேயே உயிருடன் இருக்கும் நடிகர் ரஜினிக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து, நாள்தோறும் அதற்கு அபிஷேகமும் , தீபஆராதனைகளும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com