Madras highcourt dismisses jananayakan film censorship case
madras HC, vijayPT web

’ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம் | வழக்கை வாபஸ் பெற்ற படக்குழு.. மனு தள்ளுபடி!

ஜன நாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Published on

ஜன நாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் கடைசிப் படமாக உருவாகி இருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், கடந்த ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால், குறிப்பிட்ட தேதியில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை. இதையடுத்து, ஜனநாயகன் படக்குழு, தணிக்கை வாரியத்தின் செயல்பாட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதுதொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்தநிலையில், ’ஜனநாயகன்’ திரைப்படம் மறுத் தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.

Jana Nayagan
Jana Nayagan

இதைத் தொடர்ந்து, ஜனநாயகன் பட தணிக்கை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக படத் தாயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய மனுவை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜன நாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Madras highcourt dismisses jananayakan film censorship case
ஜனநாயகன் | ’வழக்கை விசாரிக்க விருப்பமில்லை..’ தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com