இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில், அரசின் விலையில்லா பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அதனால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஏ.ஆர். முருகதாஸை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திட தேவராஜன் என்பவர் புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் அரசுக்கு எதிராக இருப்பதாகக் கூறப்படும் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டாதால், அதில் அடிப்படை முகாந்திரம் இல்லை என மனுவில் முருகதாஸ் கோரியிருந்தார்.
இதனை அடுத்து முருகதாஸ் கைதுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தன் மீதான முதல் தகவல் அறிக்கை மீது விசாரணை நடத்த ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதித்தது முருகதாஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி இளந்திரையன் காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கும் போது முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார்