\
விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த சக்சஸ் ஹீரோயின்

விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த சக்சஸ் ஹீரோயின்

விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த சக்சஸ் ஹீரோயின்
Published on

விஜய்சேதுபதியின் ‘ஜூங்கா’வில் மீண்டும் மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார்.

மலையாள ப்ளாக்பாஸ்டர் படமான ‘பிரேமம்’மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். இதற்கு முன்னால் விஜய்சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர்களது காம்பினேஷன் சினிமா ரசிகர்கள் இடையே அதிகம் பேசப்பட்டது. அதேபோல் அப்படங்களும் வியாபார ரீதியில் வெற்றியும் அடைந்தன. 

இந்நிலையில் செபாஸ்டியன் மீண்டும் ‘ஜூங்கா’வில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் என்ன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறித்து எந்தத் தகவலையும் படக்குழு தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே அப்படத்தில் வனமகன் ஹீரோயின் சயிஷா நடித்திருக்கிறார். பாரீசில் நடந்த ஷூட்டிங் அனுபவத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com