'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மாதுரி தீட்சித், சுனில் ஷெட்டி கலக்கல் ஆட்டம் - வீடியோ

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மாதுரி தீட்சித், சுனில் ஷெட்டி கலக்கல் ஆட்டம் - வீடியோ
'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மாதுரி தீட்சித், சுனில் ஷெட்டி கலக்கல் ஆட்டம்  - வீடியோ
பாலிவுட் நட்சத்திரங்களான மாதுரி தீட்சித், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் சூப்பர் ஹிட் என்பது தெரிந்ததே. அதிலும் குறிப்பாக தோளை குலுக்கி போடும் ஸ்டெப் செம ஹிட் ஆனது. இந்த பாடலுக்கு உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்கள் ஆட்டம் போட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன.
இந்த நிலையில் பாலிவுட் நட்சத்திரங்களான மாதுரி தீட்சித், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'டான்ஸ் திவானே 3' எனும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில், இந்த வார இறுதியில் வெளியாகவிருக்கும் எபிசோடில் மாதுரி தீட்சித், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் முன்னோட்டத்தில் மாதுரி தீட்சித், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் மூவரும் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர். இதன்மூலம் இந்த வார  'டான்ஸ் திவானே 3' எபிசோட் பார்வையாளர்களுக்கு செம விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com