\
மணிரத்னத்துடன் பணியாற்ற "ரோஜா" நடிகை விருப்பம்

மணிரத்னத்துடன் பணியாற்ற "ரோஜா" நடிகை விருப்பம்

மணிரத்னத்துடன் பணியாற்ற "ரோஜா" நடிகை விருப்பம்
Published on

இயக்குனர் மணிரத்னத்துடன் பணியாற்ற நடிகை மதுபாலா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான படம் ரோஜா. அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. நல்ல நாயகியாக மதுபாலா வலம் வந்தாலும் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். ஹிந்தி, தெலுங்கு உலகில் அவ்வப்போது தலைகாட்டிய அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான "வாயை மூடி பேசவும்" படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் நடிகை மணிரத்னத்துடன் பணியாற்ற மதுபாலா மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்," மணிரத்னம் என் சிறந்த நண்பர் என்பதை தாண்டி ஒரு பெரிய இயக்குனர். ரோஜா படத்தில் எந்த அளவிற்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தேனோ அதேபோன்று மீண்டும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com