\
‘கதிர், விக்ரம் சுகுமாறன்...’ - மீண்டும் இணைந்த ‘மதயானைக் கூட்டம்’  படக்கூட்டணி!

‘கதிர், விக்ரம் சுகுமாறன்...’ - மீண்டும் இணைந்த ‘மதயானைக் கூட்டம்’ படக்கூட்டணி!

‘கதிர், விக்ரம் சுகுமாறன்...’ - மீண்டும் இணைந்த ‘மதயானைக் கூட்டம்’ படக்கூட்டணி!
Published on

விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘மதயானைக் கூட்டம்’ வெளியானது. நடிகர் கதிர் அறிமுகமான இப்படத்தை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தயாரித்திருந்தார். ஓவியா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் எட்டு வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.

‘மதயானைக் கூட்டம்’ படத்திற்குப் பிறகு ‘இராவணக் கோட்டம்’ படத்தை இயக்கி வரும் விக்ரம் சுகுமாரன் தற்போது மீண்டும் கதிருடன் இணைந்துள்ளார். லிப்ரா புரொடொக்‌ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. இதனால், எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com