மாதவன்-நயன்தாரா-சித்தார்த் கூட்டணியில் புதிய படம்!இயக்குநராகும் தயாரிப்பாளர்; மோஷன் போஸ்டர் வெளியீடு

‘ரங் தே பசந்தி’ பாலிவுட் படத்திற்குப் பிறகு மாதவன் மற்றும் சித்தார்த் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
சித்தார்த்-நயன்தாரா-மாதவன்
சித்தார்த்-நயன்தாரா-மாதவன்கோப்புப் படம்

‘தமிழ் படம் 1 & 2’, ‘வா’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘மண்டேலா’, ‘ஜகமே தந்திரம்’, ‘தலைக்கூத்தல்’ உள்பட பல படங்களை, தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த், தனது தயாரிப்பு நிறுவனம் ஒய் நாட் ஸ்டூடியோஸ் (YNOT Studios) சார்பில் தயாரித்துள்ளார். இந்நிலையில், இவர் இயக்குநராக ‘டெஸ்ட்’ என்றப் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

மாதவன் - நயன்தாரா - சித்தார்த் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மாதவனுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிப்பதாகவும் தெரிகிறது. கடந்த 2004-ம் ஆண்டில் வெளியான மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ மற்றும் கடந்த 2006-ம் ஆண்டில் வெளியான அமீர்கானின் ‘ரங் தே பசந்தி’ ஆகியப் படங்களுக்குப் பிறகு மாதவன் மற்றும் சித்தார்த் இந்தப் படத்தில் கூட்டணி அமைக்கின்றனர்.

தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள படக்குழு, டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குவது மட்டுமின்றி, எஸ். சஷிகாந்த் தனது ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். ஸ்போர்ட்ஸ் த்ரில்லர் படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது.

சித்தார்த்-நயன்தாரா-மாதவன்
2வது முறையாக பிரபல இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்- வெளியான தகவல்!

நயன்தாரா, தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ‘ஜவான்’ படப்பிடிப்பில் ஷாருக்கானுடன் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் தமிழக விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பயோபிக் படத்திலும், நடிகர் சித்தார்த், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திலும் கமிட்டாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com