“14மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறேன்”- மாதவனின் மேக்அப் அனுபவம்

“14மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறேன்”- மாதவனின் மேக்அப் அனுபவம்
“14மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறேன்”- மாதவனின் மேக்அப் அனுபவம்

விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக் படத்திற்காக மேக் அப் போட்ட அனுபவங்களை பற்றி நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு மாதவன் நடித்து வரும் திரைப்படம் ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’. இந்தப் படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. நம்பி நாராயணன் இந்திய வின்வெளி ஆராய்ச்சித்துறையான இஸ்ரோவில் ஒரு முன்னோடி விஞ்ஞானி ஆவார்.

ஆனால் இவரது காலத்தில் இவர் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆகவே கிரயோஜெனிக் ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை விற்றதாக நம்பிராஜன் 1994ல் கைது செய்யப்பட்டார். அதன்பின் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் இவரை விடுவித்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நம்பி  நாராயணன் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உச்சநீதிமன்றம் விஞ்ஞானி நம்பி நாராயணணுக்கு ரூ.50 லட்ச இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. 

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் இவர் மீது விழுந்தது. அதனையொட்டி நம்பியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தொடங்கினர். இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கி வருகிறார். நம்பியின் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாதவன் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நம்பி நாராயணன் போல் மேக்அப் செய்து கொள்ள இருக்கும் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பதிவில் மாதவன், “இந்த கேரக்டருக்காக இரண்டு வருடங்களை எடுத்து கொண்டேன். இப்போது இந்தக் கதாபாத்திரத்தின் மேக் அப்பிற்காக 14 மணிநேரமாக நாற்காலியிலேயே எழாமல் உட்கார்ந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

மேலும், “நம்பியின் உண்மையான தோற்றத்திற்காக மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறேன். அவரின் 15 வயது இளம் தோற்றம். எப்படி இந்தத்தோற்றம் வரும் என்று என்னிடம் எந்த யோசனையுமே இல்லை. நான் அவருடன் நெருங்கி இருந்ததும் இல்லை. ஆனாலும் நல்லவிதமாக கொண்டு வந்துவிடுமோ என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com