விஜய் சேதுபதியுடன் இணைந்து ’விக்ரம் வேதா’ படத்தில் நடித்திருக்கிறார் மாதவன். புஷ்கர் காயத்ரி இயக்கும் இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது.
இதில் என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருக்கும் மாதவன் கூறும்போது, ‘ என்னை சாக்லேட் பாய் என்று இன்றும் சொல்கிறார்கள். ஆனால், அலைபாயுதே, மின்னலே போன்ற படங்களில் அப்படி நடித்திருந்தேன். ஆனால் இப்போது மனதளவில் மட்டுமே சாக்லேட் பாயாக இருக்கிறேன். ஆனால் என் உடல் அப்படியில்லை. 48 வயதுகாரனாக இருக்கிறேன். சாக்லேட் பாய் கேரக்டரில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். ஆனால் அது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. இந்தியில் அடுத்து நடிப்பது பற்றி கேட்கிறார்கள். இப்போது கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தியில் நடிக்க நேரம் இல்லை’ என்றார்.