மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ரொமான்ஸ் ஜோடி

மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ரொமான்ஸ் ஜோடி

மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ரொமான்ஸ் ஜோடி
Published on

மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி மறுபடியும் இணைய இருக்கிறார்கள் என செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படம் மாபெரும் வசூலை ஈட்டியது. அந்தப் படம் மாதவனுக்கு தனி முத்திரையை அவரது திரை வாழ்க்கையில் உருவாக்கித் தந்தது. அதில் மாதவனுடன் ஜோடியாக நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் அதிகம் பேசப்பட்டார். படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாக வெளிப்பட்டிருந்தது. ஆகவே அந்த ஜோடி மறுபடியும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான தருணம் தற்போது உருவாகியுள்ளது. ‘கல்கி’ குறும்படத்தின் மூலம் அறியப்பட்ட திலிப் குமார், இயக்கப்போகும் திரைப்படத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி இணைய இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ‘மாறா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. 


இந்தப் படம் பற்றி திலிப் குமார், “மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு மாதவன் ஒரு முழுக் காதல் கதை படத்தில் நடிக்கப் போகிறார். இந்தியில் அவர் நடித்த‘தனு வெட்ஸ் மனு’ அந்த இடைவெளியை நிரப்பியது. ஆனால் அதைவிட தமிழில் நடிக்க உள்ள படத்தில் மிகவும் வசீகரமான கேரக்டரில் மாதவன் வர இருக்கிறார்” என்கிறார் திலிப்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com