\
ஜிஎஸ்டியால் சம்பளத்தை குறைத்த மதன் கார்க்கி!

ஜிஎஸ்டியால் சம்பளத்தை குறைத்த மதன் கார்க்கி!

ஜிஎஸ்டியால் சம்பளத்தை குறைத்த மதன் கார்க்கி!
Published on

ஜிஎஸ்டி வரிவிதிப்பு திரையுலகத்தை பாதித்திருப்பதால் தனது சம்பளத்தில் 15 சதவிகிதத்தைக் குறைத்துக் கொள்வதாக பாடலாசிரியரும், வசனகர்தாவுமான  மதன்கார்க்கி தெரிவித்துள்ளார். 

தியேட்டர்களுக்கு ஜிஎஸ்டி வரியாக 30 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பது வேதனை தருகிறது. இந்தப்பிரச்னை விரைவில் முடிவுக்கு வந்து திரையுலகம் பழைய நிலைக்கு திரும்பும். அதுவரை பாடல்கள், வசனம் எழுதுவதற்கான எனது சம்பளத்தை 15 சதவிகிதம் குறைத்துக் கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com