‘மாரி2’ படம் தொடர்பாக நடிகை சாய் பல்லவி வெளியிட்டுள்ள படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கி வரும் திரைப்படம் ‘மாரி2’. இதன் முதல் பாகம் 2015ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் தனுஷ் ஏற்றிருந்த கதாப்பாத்திரம் பரவலாக பேசப்பட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை ‘செஞ்சுடுவேன்’ என பஞ்ச் டயலாக் பேசும் அளவுக்கு மிக பிரபலமானது. ஆகவேதான் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்தது படக்குழு. முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சாய் பல்லவி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
‘மாரி2’ படம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு போஸ்டர்கள் வெளியாகி இருந்தநிலையில், சாய் பல்லவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.
அதில், சாய் பல்லவியின் கேரக்டர் ‘அராத்து ஆனந்தி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அந்தப் படத்தின் முதல் கேரக்டர் போஸ்டர்.
இதனையடுத்து, #AraathuAanandhi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.