"அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம்" - வெளியானது மாநாடு படத்தின் ‘ஒற்றுமையின் குரல்’ பாடல்

"அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம்" - வெளியானது மாநாடு படத்தின் ‘ஒற்றுமையின் குரல்’ பாடல்
"அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம்" - வெளியானது மாநாடு படத்தின் ‘ஒற்றுமையின் குரல்’ பாடல்
Published on

சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் மாநாடு திரைப்படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த சினிமாவிற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ‘ஒற்றுமையின் குரல்’ என்ற பாடல் வெளியாகியிருக்கிறது.

மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஆகியனவற்றை வலியுறுத்தும் இந்தப் பாடலை சிம்பு பாடியிருக்கிறார். நீண்ட நாள்களுக்குப் பிறகு சிம்புவின் குரலில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருக்கிறார். இப்பாடலை சிம்பு முழுஎனர்ஜியுடன் பாடியிருக்கிறார். அறிவும் பாடலின் இடையில் குரல் கொடுத்திருக்கிறார்.

“ஒரு நாடு இது என்றாலும் பல நாடுகளின் கூடு, சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சமநீதி தந்தாலே சண்ட வராது” என அந்தப் பாடல் துவங்குகிறது. “அதே போல இந்து முஸ்லிம் கிறிஸ்து, நம்ம பூர்வ குடி பர்ஸ்ட்டு” என்று தொடர்கிறது அடுத்தடுத்த வரிகள். முழுமை ஒற்றுமையினை வலியுறுத்துவதாக் சொல்லப்படும் இந்தப் பாடல் வரவேற்கத்தக்கதே.

நிச்சயம் படத்தின் வரிகளை வைத்து பார்க்கும்பொழுது, இத்திரைப்படம் மிகப்பெரிய அரசியல் விவாதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com