தீபாவளி ரேஸிலிருந்து வெளியேறிய மாநாடு - விளக்கமளித்த தயாரிப்பாளர்

தீபாவளி ரேஸிலிருந்து வெளியேறிய மாநாடு - விளக்கமளித்த தயாரிப்பாளர்
தீபாவளி ரேஸிலிருந்து வெளியேறிய மாநாடு - விளக்கமளித்த தயாரிப்பாளர்

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படாது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தீபாவளி ரேஸிலிருந்து மாநாடு திரைப்படம் பின்வாங்கியுள்ளது. மேலும் நவம்பர் 25ம் தேதி படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'முழுவீச்சில் தயார் செய்து வெளியீடாக வந்துவிட அனைத்து முயற்சியும் செய்யப்பபட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல.. விழா நாளில் மக்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதை கருத்தில் கொண்டு தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை ஒருபோதும்ப பார்ப்பது புத்திசாலித்தனமுமல்ல. என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும்; நஷ்டமடையக்கூடாது. ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது. நவம்பர் 25ம் தேதி படம் வெளியாகும், மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com